Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் ... திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா நிறைவு! திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 35 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம்!
எழுத்தின் அளவு:
ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 35 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம்!

பதிவு செய்த நாள்

30 நவ
2015
11:11

சபரிமலை: ஐயப்பா சேவா சங்கம் சார்பில் சபரிமலை, பம்பை உள்ளிட்ட 35 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் நடத்தப்படுகிறது. சன்னிதானத்தில் தேவசம்போர்டு 24 மணி நேரமும் அன்னதானம் நடத்துகிறது.

பக்தர்களுக்கு சேவை செய்வதில் ஐயப்பா சேவா சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 21 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அன்னதானம் நடத்தி வருகிறது. சபரிமலை, பம்பை, வலியானவட்டம், கரிமலை, எருமேலி, அழுதை உட்பட சபரிமலை பாதைகளில் 35 இடங்களில் அன்னதானம் நடத்துகிறது, காலை 7.30 முதல் 11 வரை உப்புமா, பொங்கல், பகல் 12 முதல் மூன்று மணி வரை சோறு, ரசம், பொரியல், ஊறுகாய், மாலை 6.45 மணி முதல் இரவு பத்து மணிவரை உப்புமா, கஞ்சி ஆகியவை வழங்கப்படுகிறது.

பம்பை முதல் சன்னிதானம் வரை 21 இடங்களில் ஆக்சிஜன் பார்லர்கள் சங்கம் சார்பில் நிறுவப்பட்டுள்ளது. இவை பம்பை அரசு ஆஸ்பத்திரியுடன் ஹாட்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சபரிமலை, சரங்குத்தி, மரக்கூட்டம், சபரிபீடம், அப்பாச்சிமேடு, நீலிமலை, சுவாமி ஐயப்பன் ரோட்டில் கல்மேடு, செழிக்குழி, மடுக்கா ஆகிய இடங்களில் ஸ்டிரெச்சர் சர்வீஸ் உள்ளது.

சன்னிதானத்தில் மாளிகைப்புறம் கோயில் அருகே உள்ள அன்னாதான மண்டபத்தில் தேவசம்போர்டு சார்பில் 24 மணிநேரம் தொடர்ச்சியாக அன்னதானம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar