Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் கோவில்களில் ... கள்ளக்குறிச்சியில் சாய்பாபா பிறந்த நாள்! கள்ளக்குறிச்சியில் சாய்பாபா பிறந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரத்தில் 11ம் நுாற்றாண்டு புத்தர்சிலை கண்டுபிடிப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமநாதபுரத்தில் 11ம் நுாற்றாண்டு புத்தர்சிலை கண்டுபிடிப்பு!

பதிவு செய்த நாள்

01 டிச
2015
11:12

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்துார் அருகே சம்மந்தவயல் விவசாய நிலத்தில் 11 ம் நுாற்றாண்டு புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலை 5 அடி உயரம். புத்தர் தியான கோலத்தில் உள்ளார். கீழ் பகுதி மண்ணில் புதைந்து உள்ளது. மார்பில் சீரை என்ற மேலாடையும், இடுப்பு ஆடையும் சிற்பத்தில்  வடிவமைத்துள்ளன. புத்தருக்கு நீண்ட காதுகள் உள்ளன. கையில் உள்ள தர்மச் சக்கரம், தலையின் சுருள்முடி சிதைந்து காணப்படுகின்றன. சுருள்முடிக்கு மேல் ‘உஷ்ணீஷம்’ என்ற தீச்சுடர் உள்ளது. புன்னகை புரியும் இதழ்களுடன் மிக அழகாக சிற்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதனை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் அரியான்குண்டு,  சுந்தரபாண்டியன் பட்டினத்தில் ஏற்கனவே புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த 2 சிலைகளும் கடற்பகுதியில் கிடைத்தவை. தற்போது விவசாய நிலப்பகுதியில் சிலை கிடைத்துள்ளன. பல ஆண்டுகள் சிலை திறந்தவெளியில் இருந்ததால் தேய்மானம் அடைந்து உள்ளது. மேலும் சம்மந்தவயல் அருகில் ஆனந்துார், காமினி, சுத்தமல்லி போன்ற கிராமங்களின் பெயர்கள் புத்தமதம் தொடர்புடையதாக உள்ளன. புத்தரின் முதன்மை சீடரான ஆனந்தரின் பெயரால் ஆனந்துார் உருவாக்கப்பட்டிருக்கும். அதேபோல் சுத்தமல்லி என்பது சித்த மவுலி என்பதன் திரிபு. இதற்கு புத்தரின் உருவத்தை தலையில் தாங்கியவர் என்பது பொருள். காமினி என்பது இலங்கை சிங்கள சொல். இதன்மூலம் 11, 12 வது நுாற்றாண்டில் தமிழகம், இலங்கை இடையே அரசியல், வணிகம் தொடர்பு இருந்துள்ளது. இதன்மூலம் புத்தமதம் பரவி இருக்கும். கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar