Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவகோட்டை சிவன் கோயில்களில் 1008 ... திருப்பூர் ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம்! திருப்பூர் ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொன்மை வாய்ந்த கோவிலில் புனரமைப்பு பணிகள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தொன்மை வாய்ந்த கோவிலில் புனரமைப்பு பணிகள்!

பதிவு செய்த நாள்

01 டிச
2015
11:12

உடுமலை: தொன்மை வாய்ந்த, கண்டியம்மன் கோவிலை புனரமைக்க, தொல்லியல் துறையின் தொழில்நுட்ப கருத்துரு பெற்று நடவடிக்கை எடுக்க இந்து அறநிலையத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.  உடுமலை சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவில் உள்ளது. உப்பாறு படுகை வரலாற்றின் ஆவணமாக காணப்படும் இந்த கோவில், போதிய பராமரிப்பில்லாமல், பொலிவிழந்து வருகிறது.  இருகருவறை; ஒரே தெய்வம் என பல்வேறு சிறப்புகளை பெற்ற கோவிலின் முன்மண்டபம், கோபுரம், மேற்கூரை பழுது, கொடி மரத்தில் விரிசல், தரைதளம் சிதிலம் உட்பட கோவிலில் தற்போது பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக புகார் தெரிவித்து வந்தனர்.

எனவே, கோவிலை முழுவதுமாக புனரமைக்க வேண்டும் என்ற பக்தர்கள் கோரிக்கை,‘தினமலர்’ நாளிதழில் செய்தியாக வெளியானது.  இது குறித்து இந்து அறநிலையத்துறையினர் கூறியதாவது: சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவிலின் தொகுப்பு கோவிலாகும். தொன்மையான இக்கோவிலை புனரமைக்க, துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகளை, 14 வது நிதி ஆணைய நிதி ஒதுக்கீட்டில், மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த கோவிலாக இருப்பதால், விதிமுறைகளின்படி,  தொல்லியல் துறையின் தொழில்நுட்ப கருத்துரு பெற்ற பிறகே, துறை சார்பில், மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும். தொல்லியல் வல்லுனர்கள், கோவிலில் ஆய்வு மேற்கொண்டு, தொன்மை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான தொழில்நுட்ப கருத்துரு தேவையுள்ளதால், தொல்லியல் துறை சார்பில், நிபுணர், இவ்வாரத்தில், மீண்டும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அறிக்கை அடிப்படையில், கல்கட்டுமானமாக உள்ள கோவில், முழுவதுமாக பிரித்தெடுக்கப்பட்டு, விரிவான முறையில், முழுமையாக திருப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்கள் மகிழ்ச்சி
: நுாற்றாண்டுகளை கடந்த, கண்டியம்மன் கோவிலை புனரமைக்க, நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்து அறநிலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவில் சுவர், முன்மண்டப துாண் மற்றும் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் சிதிலமடையாமல், தொல்லியல் துறை வழிகாட்டுதல்படி, புதுப்பிக்கப்பட உள்ளதால், வரலாற்று ஆய்வாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar