Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! இன்று பைரவாஷ்டமி: கஷ்டங்கள் காற்றில் பறக்க பைரவரை வணங்குங்கள்! இன்று பைரவாஷ்டமி: கஷ்டங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை கடைஞாயிறை முன்னிட்டு திருநாகேஸ்வரத்தில் நாளை கொடியேற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கார்த்திகை கடைஞாயிறை முன்னிட்டு திருநாகேஸ்வரத்தில் நாளை கொடியேற்றம்!

பதிவு செய்த நாள்

03 டிச
2015
11:12

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களுள் ஒன்றான கிரிகுஜாம்பிகை நாகநாதர்கோவில் உள்ளது. சேக்கிழாரின் ஆத்மார்த்த தலமான இங்குள்ள நாகநாதரை திருமால், பிரம்மா, இந்திரன், சூரியன், சந்திரன் முதலிய தேவர்களும், கவுதமர், பராசரர், மார்க்கண்டேயர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டு பேறு பெற்றுள்ளதாக தல வரலாறுகள் கூறுகின்றன. இங்குள்ள கிரிகுஜாம்பிகை தனிகோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். மேலும் நாகநாதரின் இடபாகத்தில் பிறையணியம்மன் சன்னதி உள்ளது. கார்த்திகை மாதத்தில் முழுநிலவு நாளில் இறைவியின் திருமுகத்தில் நிலவொளி படுவது சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாககன்னி ஆகிய இரு துணைவியருடன் ராகுபகவான் மங்களராகுவாக அருள்பாலிக்கிறார்.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கடந்த 27 ம் தேதி பந்தகால் முகூர்த்தம் நடப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று மாலை விழாவின் தொடக்கமாக காப்பு கட்டுதல் நடைபெறுகிறது. நாளை 4ம் தேதி கார்த்திகை கடைஞாயிறு விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து விழா நாட்களில் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி,அம்மன் வீதி உலா காட்சி நடக்கிறது. வரும் 10ம் தேதி மாலை 6மணிக்கு திருக்கல்யாணமும், 12ம் தேதி காலை 6.45 தேரோட்டமும், 13 ம் தேதி பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதிஉலா நடைபெறுகிறது. இந்த விழா தொடர்ந்து வருகிற 14ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar