Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் ... இன்று பாரதியார் பிறந்த தினம்! இன்று பாரதியார் பிறந்த தினம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி மலைக்கு அனுமதி மறுப்பு: ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதுரகிரி மலைக்கு அனுமதி மறுப்பு: ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

11 டிச
2015
11:12

வத்திராயிருப்பு: சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.சதுரகிரி மலையில் கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 9 பக்தர்கள் உயிரிழந்தனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையில் இருந்து கீழே இறங்கமுடியாமல் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இதற்கு பின் மலைக்கு செல்ல மதுரை, விருதுநகர் மாவட்ட கலெக்டர்கள் தடை விதித்தனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டும் 4 நாட்கள் வீதம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பக்தர்கள் சென்று வருகின்றனர்.

சூடம் ஏற்றி வழிபாடு: இந்நிலையில் கடந்த பவுர்ணமி போது வழிபாட்டிற்காக ஏராளமான பக்தர்கள் மலைக்கு வந்தனர். மலைப்பகுதியில் உள்ள ஆறு, ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி யாரையும் அனுமதிக்கவில்லை. அடிவாரத்திலேயே சூடம் ஏற்றி வழிபாடு செய்து திரும்பினர். இன்று நடைபெறும் அமாவாசை வழிபாட்டிற்காவது செல்லலாம் என நேற்று முன்தினம் பிரதோஷ தினம் முதல் தினமும் பக்தர்கள் மலைக்கு வந்தபடி இருந்தனர்.

வாக்குவாதம்: ஆனால் இப்போதும் ஆறுகளில் நீர் குறையாததாலும், அவ்வப்போது மழை பெய்துவருவதாலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று காலை நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்தனர். அவர்களை வனத்துறையினர், போலீசார் அனுமதிக்காததால் நீண்ட நேரம் அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயிலில் காத்திருந்தனர். சில பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சமாதானம்: எஸ்.ஐ.,க்கள் அருண்பாண்டியன்(வத்திராயிருப்பு) ஜெயராமன்(சாப்டூர்)வனவர் சிவலிங்கம் உட்பட பலர் பக்தர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அடிவாரத்திலேயே பூஜைகளை செய்து வழிபட்டு ஏமாற்றத்துடன் ஊர்திரும்பினர். இன்றும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் மதுரை, விருதுநகர் மாவட்ட போலீசார் அதிக
எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனுமதி மறுப்பு: போலீசார் கூறுகையில் ,மலைப்பகுதியில் திடீரென அவ்வப்போது மழைபெய்து வருவதால் எந்நேரமும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காகவே அனுமதி மறுக்கப்படுகிறது. இதை புரிந்து கொண்டு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும், என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar