Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய சிறப்பு! பாண்டுரங்கன் அலங்காரத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள்! பாண்டுரங்கன் அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் புனித நீராடல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2015
03:12

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று அதிகாலை முதல் கங்கை பொங்கி வரும் ஐதீகம் கொண்ட புனித கிணற்றில் இருந்து நீர் இறைத்து தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் புனித நீராடினார்.

Default Image
Next News

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிசநல்லூர் ஸ்ரீ பகவந்நாம போதேந்த்திர சுவாமிகள், ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள், ஸ்ரீதர அய்யாவாள் சுவாமிகள் ஆகியோர் சாஸ்திரங்கள், வேதங்கள் குறித்து விவாதித்த தலம். இத்தலத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீதர அய்யாவாள் மகான் வாழ்ந்த காலத்தில் ஒரு கார்த்திகை அமாவாசை தினத்தில் அவரது தந்தைக்கு திதி கொடுக்க ஏற்பாடு நடந்து வந்த நிலையில்,ஏழை ஒருவர் பசியால் துடித்தது காண பொறுக்காமல்,திதிக்காக ஏற்பாடு செய்த உணவை அய்யவாள் வழங்கினார்.  திதிக்காக வந்த சாஸ்திரிகள் திதி கொடுக்கும் முன்பே அதற்காக தயாரித்த உணவை அளித்து விட்டதால் தோஷம் ஏற்பட்டுள்ளது. இதனை போக்க வேண்டுமானால் நீ காசியில் போய் நீராடி வந்த பின்னரே திதி கொடுக்க இயலும் என கூறி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அய்யாவாள் திதி கொடுக்காமல் இருக்க முடியாதே என வருந்தி உடனடியாக சிவனிடம் கங்காஷ்டகம் எனும் ஸ்தோஸ்திரத்தை வாசிக்க, அவரது வீட்டு கிணற்றில் கங்கை பிரவாகமாக பொங்க தொடங்கியதாக சஸ்திரங்கள் கூறுகிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற ஸ்ரீ அய்யாவாளின் பெருமையை உலகுக்கு உணர்த்திய தினமான கார்த்திகை அமாவாசை தினத்தில் ஆண்டு தோறும் அய்யாவாள் வீட்டு கிணற்றில் கங்கை நீர் பிரவாகமாக பொங்கி வருவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் கார்த்திகை அமாவாசை தினமான இன்று அதிகாலை முதற்கொண்டு தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடக, புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்காண பக்தர்கள்   வரிசையில் வந்து முதலில் காவிரியில் புனித நீராடி பின்னர் அய்யாவாள் மடத்தில் உள்ள விசேஷ கிணற்றில் புனித நீராடினார். இந்நிகழ்ச்சியையொட்டி ஸ்ரீதர அய்யாவாள் சுவாமிகள் விக்ரகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதற்கு விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. நாளை 12ம் தேதி சனிக்கிழமை ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாளின் திருவீதியுலாவும் அதனை அடுத்து ஸ்ரீ ஆஞ்சநேய உற்சவமும் நடைபெற்று இவ்வாண்டிற்காண உற்சவம் இனிதே நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar