Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்காமீஸ்வரர் கோவிலில் ... சபரிமலை நடை  இன்று  அடைப்பு சபரிமலை நடை இன்று அடைப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்- 3: பெற்றோரைக் கண்ணியப்படுத்துவோம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஆக
2011
02:08

அலீமக்தூம் மஹாயிமீ என்பவர், சிறுவராக இருந்த காலத்தில், ஒரு இரவில் அவருடைய தாயார், மகனே! எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா, என்றார். மஹாயிமீ தண்ணீர் கோப்பையை நன்றாகக் கழுவி, தண்ணீர் முகரச் சென்ற போது, குடத்தில் தண்ணீர் இல்லை. எனவே, ஒரு கிணற்றுக்குப் போனார். அங்கிருந்து தண்ணீர் கொண்டு வந்தார். அவர் வருவதற்குள், தாயார் தூங்கிவிட்டார். மஹாயிமீ விடிய விடிய அம்மாவின் அருகிலேயே தண்ணீர் கோப்பையுடன் நின்றார். காலையில் தாயார் கண்விழித்துக் கேட்டால், உடனே அவருக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தார்.  மறுநாள் காலை தாயார் கண் விழித்தார். தன் அருகில் மகன் தண்ணீர் கோப்பையுடன் நிற்பதைப் பார்த்தார். வியப்பு மேலிட,மகனே! எவ்வளவு நேரம் இப்படி நிற்கிறாய்? என்று கேட்டார். அம்மா! நேற்றிரவு தாங்கள் தண்ணீர் கேட்டீர்கள். நான் கொண்டு வருவதற்குள் உறங்கி விட்டீர்கள். விழித்தவுடன் கேட்டால் கொடுக்கலாமென, தங்கள் அருகிலேயே உறங்காமல் காத்து நிற்கிறேன், என்றார் மஹாயிமீ.

அந்தத்தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். இறைவன் அதை ஏற்றுக்கொண்டான். பெற்றவர்கள் மரணமடைந்து விட்டாலும் கூட, அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை உண்டு என்கிறார்கள் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள். மரணித்து விட்ட பெற்றோருக்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பைக் கோருங்கள். பெற்றோர்களின் உறவைத் துண்டிக்காமல் வாழுங்கள். அவர்களுடைய நண்பர்களுக்கு கண்ணியம் கொடுங்கள். மரணித்து விட்ட உங்கள் பெற்றோருக்காக நீங்கள் செய்யும் தர்மத்தின் நன்மை உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர்கள் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தம் உள்ளது. பெற்றோர்களின் கோபத்தில் அல்லாஹ்வின் கோபம் உள்ளது. தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்றெல்லாம் அண்ணலாரின் பொன்மொழிகளை உதிர்த்திருக்கிறார்கள். பெற்றவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டியது மிகமிக அவசியம் என்பது இன்றைய இனிய சிந்தனையாக அமையட்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.29மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று தேய்பிறை தசமி நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar