விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல்களில் 11 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் காணிக்கை இருந்தது. விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உள்ள 8 நிரந்தர உண்டியல்கள், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் கொளஞ்சி, ஆய்வாளர் சுபத்ரா, மேலாளர் குருநாதன் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை 11:00 மணியளவில் திறந்து, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கரூர் வைஸ்யா வங்கி சார்பில் இயந்திரம் மூலம் ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. அதில், 11 லட்சத்து 30 ஆயிரத்து 94 ரூபாய், 32.500 கிராம் தங்கம், 556.700 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக இருந்தன.