Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ் சிந்தனை: நல்வாழ்த்து ... திருப்பூர் சிவாலயங்களில் ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 டிச
2015
11:12

திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் திருப்பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், மார்ச் முதல் வாரத்தில் கும்பாபிஷேக விழா நடத்தப்படுகிறது. திருப்பூர் நகரில், நுõற்றாண்டு பழமையான விசாலாட்சியம்மன் உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. கோவிவில், கும்பாபிஷேகம் நடத்தி, 15 ஆண்டுகள் ஆன நிலையில், கும்பாபிஷேகம் நடத்த, திருப்பணிகள் நடந்து வருகின்றன. சுற்றுப்பிரகாரத்தில் தரை தளம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு, 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்  புதிதாக கருங்கற்கள், பாலீஷ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மூலவர், அம்மன் மற்றும் சண்முக சுப்ரமணியர் சன்னதி கருவறை முன் பகுதி மற்றும் கனகசபை, பள்ளியறை,  நடராஜர் சன்னதிகளின் முன் புறம் என, நான்காயிரம் சதுர அடியில், அற்புத வேலைப்பாடுகளுடன், செம்பு தகடு பதித்து, தங்க முலாம் பூசப்படுகிறது.

சனீஸ்வரர் சன்னதி முழுவதும் வெள்ளி தகடு, 63 நாயன்மார்களுக்கு புதிதாக கல் மண்டபம், கனகசபை முழுவதும் வெள்ளி முலாம் பூசிய தகடு பதிக்கப்பட உள்ளது. ராஜகோபுர முன் மண்டபம், துõண்கள் அழகு படுத்துதல், மேல்நிலை நீர் தேக்க தொட்டி, புதிய கொடி மரம், ராஜகோபுரம் மற்றும் சன்னதி கோபுரங்களுக்கு வர்ணம் பூசுதல், கதவுகள் புதுப்பித்தல், நந்தவனம் அமைத்தல், சுவாமி சன்னதி படிகள் முழுவதும் வெண்கலத்தில் அமைத்தல் ஆகிய  திருப்பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. பட்டி விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, கோவில் முன்புறம் உள்ள கடைகள் மாற்றி அமைத்து, கோவில் முன்பு அழகுபடுத்துதல் மற்றும் மேற்கூரை அமைத்தலும் நடக்கிறது. திருப்பணி முடிந்து, வரும் மார்ச் மாதம், முதல் வாரத்தில் கும்பாபிஷேகம் நடத்த, திருப்பணிக்குழு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள்  திட்டமிட்டு, பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் குறித்து, அமைச்சர் ஆனந்தன், கலெக்டர் கோவிந்தராஜ், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்சினி மற்றும் திருப்பணி குழுவினர்  பங்கேற்ற, ஆலோசனை கூட்டம், கோவில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar