பதிவு செய்த நாள்
25
டிச
2015
12:12
ப.வேலூர்: ப.வேலூர், சுல்தான் பேட்டை காந்திநகரில், தன்னாசியப்பன், கைலங்காரி அம்மன், பகவதியம்மன், மதுரைவீரன் சுவாமிகளுக்கு திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, பக்தர்கள், நேற்று முன்தினம் காவிரியாற்றுக்கு சென்று புனிதநீராடி, ஊர்வலமாக தன்னாசியப்பன் கோவிலுக்கு வந்தனர். பின்னர், பகவதி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. கடந்த, 22ம் தேதி மாலை, 6 மணிக்கு மேல், பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, பூஜை செய்தனர். தொடர்ந்து, மாவிளக்கு பூஜை நடந்தது. 23ம் தேதி கிடாவெட்டு நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராடும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.