சென்னிமலை கோவிலில் பக்தர்களுக்கு தொந்தரவு: குரங்குகள் பிடிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2015 12:12
சென்னிமலை: சென்னிமலை மலை மீது புகழ் பெற்ற முருகன் ஆலயம் உள்ளது. படி வழியாக நடந்து வரும் பக்தர்கள் மற்றும் கோவிலின் முன்னே நிற்கும் பக்தர்களை அங்குள்ள குரங்கு கூட்டங்கள் தொந்தரவு செய்து வந்தது. பூஜைக்கு கொண்டு வரும் தேங்காய், பழங்கள் பூக்களை அபகரித்து கொள்கிறது. தனியாக வரும் பக்தர்களிடம், கொஞ்சம் அதிகமாகவே குரங்குகள் கூட்டம் சேட்டை செய்கிறது. பக்தர்களின் வேண்டுகோளின்படி, கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் குரங்குகளை பிடிக்க கோரிக்கை வைத்தார். பின்னர், வனத்துறை சார்பாக, இரண்டு கூண்டுகள் கொண்டு வரப்பட்டு, அதில் தேங்காய், பழங்கள் போன்றவை வைக்கப்பட்டன. இவைகளை சாப்பிட, குரங்குகள் கூண்டுக்குள் புகுந்தன. நான்கு நாட்களில், 31 குரங்குகள் பிடிக்கப்பட்டன.