பவானிசாகர்: பவானிசாகர், டானாய்க்கன் கோட்டை கோவிலில் உள்ள, சோமேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலை, 11 மணியளவில் செண்டை வாத்தியம் முழங்க ஐயப்பன் ஊர்வலம் துவங்கியது. பவானிசாகர், பகுடுத்துறை, ஒ.எ.காலனி, முகாம் வழியாக தொட்டம்பாளையம் சென்றடைந்தது. அங்கு பல்வேறு சிறப்பு வழிபாட்டை முடித்துக்கொண்டு மாலை மீண்டும் ஊர்வலம் விழா பந்தலை அடைந்தது. இரவு ஐயப்பனுக்கு மஹா தீபாராதனையும், வான வேடிக்கையும் நடந்தது.