பதிவு செய்த நாள்
25
டிச
2015
12:12
ப.வேலூர்: நாமக்கல், ப.வேலூர் பேட்டையில் உள்ள, திருஞான சம்பந்தர் மடாலயம் சார்பில், நடராஜர் திருக்கல்யாண உற்சவ ஆருத்ரா அபிஷேகம், திருவாபரண அலங்கார ஞானகாச திருவாதிரை தரிசன, 101ம் ஆண்டு மகா உற்சவ விழா, வரும், 26ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 5 மணியளவில் திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை, திருப்பாவை பாராயணம் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 6 மணிக்கு பால் அபிஷேகமும், 8 மணியளவில், தேங்காய்களை கொண்டு, சிவலிங்கம் அமைத்து ஆராதனை நடக்கிறது. இந்த தேங்காய் மற்றும் எலுமிச்சை பழம், கிரகஹங்களில் ஏற்படும் தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம்.