கோவை: பீளமேடு பி.எஸ்.ஜி., அறநிலையம் வானவில் அமைப்பு சார்பில், மாதம்தோறும், பக்தி இலக்கிய சிந்தனையை வளர்க்கும் விதமாக ஆன்மிக இலக்கிய தொடர் சொற்பொழிவுகளை நடத்தி வருகிறது. நாளை மாலை 5:30 மணிக்கு, பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அரங்கில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்ற தலைப்பில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, வரலாற்று துறை பேராசிரியை ருக்மணி பங்கேற்று சொற்பொழிவாற்றுகிறார். எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் ஆன்மிக ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.