Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துவங்கியது பழநி பாதயாத்திரை ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா விழா கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா விழா கோலாகலம்!

பதிவு செய்த நாள்

26 டிச
2015
12:12

திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், நேற்று காலை, ஆருத்ரா திருவிழா சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. இன்று(டிச.26ல்) அதிகாலை, 5:00 மணிக்கு, கோபுர தரிசனம் நடைபெற்றது.

திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவிலில், மூன்று நாட்கள் நடைபெறும் ஆருத்ரா விழா நேற்று துவங்கியது.அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு தனுர்மாத அலங்காரம், சிறப்பு பூஜையும், காலை, 7:30 மணிக்கு, காலசந்தி பூஜையும் நடந்தன. காலை 9:00 மணிக்கு, உற்சவர்கள் சோமாஸ்கந்தர், வண்டார் குழலியம்மன், விநாயகர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு சுவாமிகளும், சிறப்பு அலங்காரத்தில், பழையனுார், திருவாலங்காடு ஆகிய கிராமங்களில் உள்ள, மூன்று வீதிகளில் உலா வந்தனர். அப்போது பக்தர்கள் தேங்காய் உடைத்து, பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.

மதியம், 1:00 மணிக்கு, மேற்கண்ட நான்கு சுவாமிகள் கோவில் வளாகத்திற்கு திரும்பி வந்தனர். பின், கோவில் குருக்கள் திருவெம்பாவை பாட, சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 9:00 மணிக்கு உற்சவர் நடராஜ பெருமான், கோவில் பின்புறத்தில் உள்ள விருட்சம் ஆலமரத்தின் கீழ் மேடையில் வந்து எழுந்தருளினார். பின், 33 வகையான அபிஷேகங்கள், இன்று அதிகாலை, 4:00 மணி வரை, தொடர்ந்து நடந்தன. இன்று காலை, 5:00 மணிக்கு உற்சவர் நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கோபுரத்தின் முன் எழுந்தருளி, கோபுர தரிசனம் நடைபெற்றது.  காலை, 9:00 மணிக்கு உற்சவர் டராஜப் பெருமான் பழையனுார், திருவாலங்காடு முக்கிய வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அபிஷேகத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar