பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்றுமுன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி, விநாயகர், சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தன. மாலை 6:00 மணிமுதல் பக்தர்கள் கோவிலின் நான்குமாட வீதிகளை 16 முறை வலம் வருதல் துவங்கியது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சல் உற்சவத்தில் 16 கால் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்பர் இல்ல அறக்கட்டளை சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது.