அவலூர்பேட்டை: வளத்தியில் இயற்கை சீற்றம் தணிய வேண்டி மருதீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம், வளத்தி மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில், இயற்கை சீற்றம் தணியவும், <உலக நன்மைக்காகவும் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. முன்னதாக மருதீஸ்வரருக்கு, சிறப்பு புஷ்ப அலங்காரம் நடந்தது. இதில், கோவில் நிர்வாகி முருகேசன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.