திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன., 20ல் நடக்கும் தெப்பத்திருவிழாவிற்கான தேங்காய் தொடும் முகூர்த்தம் நடந்தது.கோயில் மூலவர்கள் முன்பு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, திருவிழா பத்திரிகை நகல் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் துணை கமிஷனர் செல்லத்துரையிடம் சிவாச்சார்யார்கள், பத்திரிகை வாசித்து, திருவிழா நாட்கள் குறித்தனர். பின் தேங்காய் தொடும் முகூர்த்தம் நடந்தது. ஜன., 11ல் தெப்பத் திருவிழா கொடியேற்றம், ஜன., 19ல் தெப்பம் முட்டுத்தள்ளுதல், சிறிய வைரத் தேரோட்டம் நடக்கிறது.