சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் மார்கழி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2015 12:12
நாகர்கோவில்: பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.133 அடி உயர ராஜகோபுரம், அதன் அருகே நடுவில் மண்டபத்துடன் கூடிய தெப்பக்குளம், கோயிலின் உள்ளே கலை வேலைப்பாடுகளுடன் கூடிய சுற்றுப் பிரகாரம், இசைதுாண்கள், மூலவராக மும்மூர்த்திகள் என பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழா மார்கழி திருவிழா. கடந்த 17-ம் தேதி இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூன்றாம் நாள் விழாவில் மக்கள்மார் சந்திப்பு நடைபெற்றது.விழாவில் தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவான வெள்ளியன்று தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக சுவாமி தேருக்கு எழுந்தருளிய போது போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், எஸ்.பி.தர்மராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.திருமணம் ஆன புதுமண தம்பதிகள் அதிக அளவில் இந்த தேரோட்டத்தில் கலந்து கொள்வர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.