பதிவு செய்த நாள்
26
டிச
2015
12:12
திருப்பூர் : இந்து அன்னையர் முன்னணி சார்பில், 2,007 பேர் பங்கேற்ற சுமங்கலி பூஜை, திருப்பூரில் நேற்று நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு எவரெடி காம்பவுண்டில் நடந்த சிறப்பு பூஜைக்கு, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ""தர்மத்தை காக்கக்கூடிய ஆயுதமாக, ஆன்மிகம் உள்ளது. சீரழிந்து வரும் பண்பாட்டை காக்க, சுமங்கலி பூஜை, கூட்டு வழிபாடு போன்றவை அவசியம். குழந்தைகளுக்கு, நமது பண்பாடுகளை சொல்லித்தர வேண்டும், என்றார். சிவனடியார் ராஜாமணி அம்மையார், திருவிளக்கு பூஜை நடத்தினார்; 2007 சுமங்கலி பெண்கள் பங்கேற்றனர். இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்ரமணியம், பா.ஜ., கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளர் காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.