Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2,007 சுமங்கலி பூஜை சென்னிமலை முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்க சுவாமி தரிசனத்திற்கு 5 மணி நேரம் காத்திருப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2015
12:12

திருச்சி: பண்டிகை விடுமுறையால், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், 21ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை அடுத்து, ராப்பத்து உற்சவம் துவங்கியது. இன்று பகல், 1:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, பரமபத வாசல் திறந்து இருக்கும். 28ம் தேதி வேடுபறி நிகழ்ச்சி நடப்பதால் பரமபதவாசல் திறக்கப்படாது. தொடர் விடுமுறை காரணமாக, கடந்த இரு நாட்களாக, வெளி மாநிலம், மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளன.தவிர, சபரிமலை, மேல் மருவத்துார் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள், கூட்டம் கூட்டமாக, ஸ்ரீரங்கம் கோவில் தரிசனத்துக்கு வருகின்றனர். சிறப்பு தரிசனம், 100 ரூபாய், 250 ரூபாய் கட்டண டிக்கெட்டில் வருபவர்கள், மூன்று மணி நேரத்திற்கு பின் தரிசனம் மேற்கொள்ள முடிகிறது. பொது தரிசனத்தில் மூலஸ்தான சேவை, பரமபத வாசல் சேவை என, இரண்டாக பிரித்துள்ளனர். காலை, 8:00 மணிக்கு, ரங்கா ரங்கா கோபுரம் வெளிப்புறத்தில் இருந்து செல்லும் பக்தர்கள், ஆரியபடாள் வாசல் பகுதியில் தடுக்கப்பட்டு, மதியம், 1:00 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்ட பின், உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர். இவர்கள், 5:00 மணி நேரத்திற்கு பின் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar