குருவித்துறை: குருவித்துறை சுயம்பு சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், மார்கழி வைகுண்ட ஏகாதசி உற்சவத்தில் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது.ரங்கநாத பட்டர், மூலவர் சுவாமி தேவியர்களுக்கு நறுமண பூக்களால் அலங்கரித்து அபிஷேக, புஷ்பாஞ்சலி யாகபூஜை செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் கர்ணன், கோயில் நிர்வாக அதிகாரி விஸ்வநாத் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.