பதிவு செய்த நாள்
26
டிச
2015
12:12
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் திருப்பலி சிறப்பாக நடைபெற்றது. கீழை நாடுகளின் லுார்து என அழைக்கப்படும், வேளாங்கண்ணியில் உள்ள, ஆரோக்கிய மாதா விண்மின் தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 11:45 மணிக்கு துவங்கிய, சிறப்பு பாடல் திருப்பலி, நேற்று அதிகாலை, 1:30 மணி வரை நடந்தது.தேவாலய அதிபர் பிரபாகர் தலைமையில், 25க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் கலந்து கொண்ட பாடல் திருப்பலியில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்பு, நற்கருணை ஆசி, உலக அமைதிக்கான சிறப்பு ஜெபம் ஆகியவை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் நடந்தது.நாட்டின் பல பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.