கீழக்கரை: திருப்புல்லாணி ஓம்சக்தி மன்றத்தின் சார்பாக செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு இருமுடி பயணம் மேற்கொண்டனர். வீரன்வலசை, உத்தரவை, பொக்கனாரேந்தல், பஞ்சந்தாங்கி, நம்பியான்வலசை பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் மன்றத்தலைவி ரேவதி தலைமையில் 6 பஸ்களில் சென்றனர். ஏற்பாடுகளை இந்துமகாசபை, ஓம்சக்தி மகளிர் மன்ற நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.