ஊட்டி: ஊட்டி அருகே எம்.பாலாடா கீழ்அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு சித்தி செல்வ விநாயகர், ஆனந்தமலை முருகன், ஏழு ெஹத்தையம்மன், நவகிரக தெய்வங்களுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.