கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2015 12:12
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தேவாலயங்களில், கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு, கள்ளக்குறிச்சி பகுதியில் புனித ஜெபமாலை அன்னை ஆலயம் மற்றும் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள ஆற்காடு லுத்தரன் திருச்சபை பெதஸ்தே ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பலி நிகழ்ச்சியில் கன்னிமரியாள், சுசையப்பர், குழந்தை ஏசு, மூன்று ஞானிகள், ஆட்டு இடையார்கள் ஆகியோரை ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் எழுந்தருள செய்து சிறப்பு பிராத்தனை நடந்தது. தொடர்ந்து நள்ளிரவு 12:00 மணிக்கு ஆடம்பர திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தது. குடிலில் எழுந்தருளிய ஏசு பெருமானை, ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து வழிபட்டு சென்றனர். புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குதந்தை ஜோசப்ராஜியும், புனித ஆற்காடு லுத்தரன் திருச்சபையில் போதகர் பெஞ்சமின் சுதாகர் திருப்பலி நிகழ்ச்சியினை செய்து வைத்தனர்.