காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியுடன் பிரார்த்தனை நடந்தது. காரைக்கால் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி மாதாக்கோவில் வீதியில் உள்ள புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடந்தது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயத்தில் ஏசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி தத்துருபமாக காண்பிக்கப்பட்டது. இடிமின்னல் முழுங்க பங்கு தந்தை அந்தோணி லூர்துராஜ் அடிகளார் குழந்தை ஏசு கிறிஸ்துவின் சொரூபத்தை ஏந்தி வந்து, குடிலில் வைத்தார். அப்போது, சிறப்பு திருப்பலியும் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல், காமராஜர் சாலையில் உள்ள அந்தோணியர் ஆலயம், தருமபுரத்தில் உள்ள செபாஸ்தியர் ஆலயம், கோட்டுச்சேரி, குரும்பகரகம்,நல்லத்தூர், அம்பகரத்துõர் உள்ளிட்ட பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலிகள் நடந்தது.