Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குச்சனூர் கோயிலில் சனீஸ்வரர்- ... வதிஸ்டபுரம் முத்து மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜநாகலட்சுமி கோவிலில் வளைகாப்பு திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2011
10:08

மோகனூர்: மோகனூர், ராசிபாளையம் ராஜநாகலட்சுமி கோவிலில், ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு வளைகாப்பு திருவிழா நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மோகனூர், ராசிபாளையம் மாருதி நகரில், பிரசித்தி பெற்ற ராஜநாகலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று வளைகாப்பு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டு கருட பஞ்சமி, நாக பஞ்சமி ஹோமம் பெருவிழா மற்றும், 10ம் ஆண்டு வளைகாப்பு திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை காலை 6 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்துவரும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து காலை 7 மணிக்கு, ஸ்தல புண்ணியவானும், கோ பூஜை, 8 மணிக்கு பிரம்மச்சாரி, சுமங்கிலி மற்றும் கன்னிகா பூஜையும், 9 மணிக்கு ஹோமங்கள் ஆரம்பமானது. பகல் 12 மணிக்கு ஸ்வாமிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள், கோவிலில் உள்ள புற்றுக்குள் வளையல் உள்ளிட்ட பூஜை பொருட்களை போட்டு வழிபட்டனர். அதையத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இப்பூஜையில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, கரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இருந்து, 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, ராஜநாகலட்சுமி அம்மன் அறங்காவலர் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் மக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ராமானுஜர் அவதார உற்சவ  தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar