பதிவு செய்த நாள்
02
ஜன
2016
02:01
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி கைலாசநாதர் கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
கைலாசநாதர் கோவிலில் விநாயகர், நடராஜர், சிவகாமசுந்தரி, தட்சிணாமூர்த்தி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை, புதுச்சேரி சிவனடியார் சரவணன் செய்திருந்தார். முன்னதாக, சிவனடியார் கல்யாணி அம்மாள் தலைமையில் கமலம் , மாலதி, அமுதா, விஜயலட்சுமி உள்ளிட்ட சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஊராட்சி தலைவி நாகேஸ்வரி சங்கர், ஏனாதிநாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். தொரவி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.