அனுப்பர்பாளையம் : சாமுண்டிபுரம் ஸ்ரீசபரிகிரி சாஸ்தா ஐயப்ப பக்த குழுவினர் மற்றும் செல்வ விநாயகர் கமிட்டி சார்பில், 13ம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் அன்னதான விழா, வி.பி.சிந்தன் நகரில் நடந்தது. இதையொட்டி, குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது; நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, வழிபட்டனர். தொடர்ந்து, மண்டல பூஜை நடந்தது. ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று, அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.