ஆங்கில புத்தாண்டில் குவிந்த பக்தர்கள் பழநியில் ஐந்து மணிநேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2016 03:01
பழநி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பழநியில் நேற்று அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பழநி கோயிலுக்கு தைப்பூசவிழா பாதயாத்திரை, சபரிமலை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு மலைக்கோயில், திரு ஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், பட்டத்து விநாயகர் கோயில்கள் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டன. சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
உள்ளூர்,வெளியூர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி மலைக் கோயிலில் மதுரை மாவட்ட பக்தர்கள் 10பேர் அலகு குத்தி வந்தனர். பிறமாவட்ட பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் மூன்று மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயில் சென்றனர். பொதுதரிசன வழியில் 5 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.