பதிவு செய்த நாள்
02
ஜன
2016
03:01
திருப்பூர் : ஸ்ரீராம பஜனை சபா சார்பில், திருப்பூர் முனிசீப் சீனிவாசபுரம், ஸ்ரீராம பஜனை
மடத்தில், ராதா கல்யாண உற்சவம், 17ல் நடைபெறுகிறது.
இவ்வைபம், 15ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, ராம விநாயகர் அபிஷேகத்துடன் துவங்குகிறது. 16ம் தேதி காலை, 7:00க்கு தேவ்ஜி காலனியில் உஞ்ச விருத்தி, அஷ்டபதி பஜன்; அன்றிரவு, 8:00க்கு திவ்ய நாம பஜனை டோலோத்சவம் நடக்கிறது. வரும், 17ம் தேதி காலை, 8:00க்கு முனிசீப் சீனிவாசபுரத்தில், உஞ்ச விருத்தியுடன் துவங்கும் விழாவில், காலை, 10:00 மணிக்கு ராதா கல்யாண உற்சவம் நடக்கிறது; அன்று மதியம், 1:00 மணிக்கு மஹா தீபாராதனை, ஆஞ்சநேய உற்சவத்துடன், விழா நிறைவடைகிறது.