Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூர் வரும் 17ல் ராதா கல்யாண ... சொர்ணபைரவர் கோவிலில் இன்று அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி புத்தாண்டையொட்டி கோவில்களில் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2016
03:01

புதுச்சேரி: புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு
பிரார்த்தனை நடந்தது. அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்தன.
மணக்குளவிநாயகர் கோவில் மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு
நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, தங்க கவசம்
அணிவிக்கப்பட்டது. பின், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் திரண்டு இருந்ததால் கோவிலில் இருந்து செஞ்சி சாலை வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

சீரடிசாயிபாபா: பிள்ளைச்சாவடி சீரடி சாயிபாபா கோவிலில் காலை 8 மணிக்கு சிறப்பு பூஜைகள் கொடியேற்றத்துடன் துவங்கின. சிறப்பு அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12 மணிக்கு ஆரத்தி எடுத்து, பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

சிறப்பு பூஜை: சின்னசுப்ராயபிள்ளை விதியில் உள்ள அங்காளம்மன் கோவில், கவுசிக பாலசுப்ரமணியர் கோவில், பாரதிபூங்காவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில், முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில், மொரட்டாண்டி பிரதியங்கிரா கோவில், வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில், காலாப்பட்டு பாலமுருகன் கோவில், முத்தியால்பேட்டை ஹயக்கீரிவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்ததால் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அலைமோதிய கூட்டம்: புத்தாண்டையொட்டி, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, ஆரோவில் பீச், சுண்ணாம்பாறு படகு குழாம் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. உல்லாசமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புத்தாண்டையொட்டி மக்கள் கூடும் இடங்களில் 200க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar