Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புஷ்ப விமானத்தில் மீனாட்சி அம்மன் ரமலான் சிந்தனைகள்-8 : தொழுகையின் மாண்பு ரமலான் சிந்தனைகள்-8 : தொழுகையின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
300 ஆண்டு பழமையான கல்வெட்டு: பழநி கோவிலில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஆக
2011
10:08

பழநி : பழநி மலைக்கோவிலில், 300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலைக்கோவில் கருவறையின் பின்புறம், திருச்சுற்று மண்டபத்தின் அடிப்பகுதியில் (ஜகதி), இக்கல்வெட்டு உள்ளது. இரண்டு வரிகளில் அமைந்த தகவல் குறித்து, தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நடனகாசிநாதன், பேராசிரியை திலகவதி, ஆர்வலர் ஞானசேகரன் ஆய்வு செய்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: சங்க காலத்தில், பழநி வணிக நகராக இருந்தது. பாண்டியர்களின் தலை நகரான மதுரையில் இருந்து, நீண்ட பெருவழிப்பாதை, ரோமாபுரி, கிரேக்கத்திற்கு சென்றுள்ள தகவல்களை, சில கல்வெட்டுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதற்கு மேலும் ஒரு ஆதாரமாக இக்கல்வெட்டு உள்ளது. இது, 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தவுடன் செட்டி என்பவர், பழநியைச் சேர்ந்த கெல்லி செட்டி மகனுக்கு புண்ணியம் (நற்பலன்) சேரும் வகையில், உத்திரக்கல் அமைத்துக் கொடுத்ததாக, இது தெரிவிக்கிறது. மற்றவை குறித்த தகவல் இல்லை. திருச்சுற்று மண்டபத்தின் தூண்களில், இரு சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இவை தவுடன் செட்டி, கெல்லி செட்டியின் மகனாக இருக்கலாம் என, ஆய்வு நடக்கிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar