பதிவு செய்த நாள்
04
ஜன
2016
12:01
பெங்களூரு: விவேக் நகர் குழந்தை இயேசு ஆலயம் மற்றும் திருத்தலம், 45ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் மற்றும் இரக்கத்தின் வாயில் ஜூப்ளி ஆண்டு விழா இன்று துவங்குகிறது; வரும், 14ம் தேதி தேர் பவனி நடக்கிறது. விவேக் நகர் குழந்தை இயேசு ஆலயம் மற்றும் திருத்தலம், 45ம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள, 50 அடி உயர கொடிக்கம்பத்தில், இன்று மாலை, 5:45 மணியளவில், பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பெர்னார்ட் மோரஸ் கொடியேற்றுகிறார். பின், இரக்கத்தின் வாயில் திறக்கப்படுகிறது. நாளை முதல், 13ம் தேதி வரை தினமும் அதிகாலை முதல் மாலை வரை, தமிழ், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கொங்கனி ஆகிய மொழிகளில் நற்கருணை ஆராதனை, குணமளிக்கும் வழிபாடு நடக்கிறது.
வரும், 9ம் தேதி காலை, கன்னடம், தமிழில் நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி, 10ம் தேதி அதிகாலை முதல் மாலை வரை, தமிழ், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கொங்கனி ஆகிய மொழிகளில் நற்கருணை ஆராதனை, குணமளிக்கும் வழிபாடு, கன்னடம், தமிழில் கூட்டுத்திருமணம், பொன்விழா காணும் தம்பதியினருக்கு, சிறப்பு திருப்பலி நடக்கிறது. தினமும் காலை, 6:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை திவ்ய நற்கருணை ஆராதனை, காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரையிலும், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரையிலும் பாவசங்கீர்த்தனம் நடக்கிறது. திருச்சி அருட்தந்தை ஆல்பர்ட், தஞ்சாவூர் அருட்தந்தை சேவியர் தாஸ், துாத்துக்குடி அருட்தந்தை ஜெகதீஷ் ஆகியோர் மறையுரையாற்றுகின்றனர். பெருவிழா நாளான வரும், 14ம் தேதி காலையில் தன்னார்வ தொண்டர்கள், தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், கொங்கனியில் திருப்பலி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு திருத்தேரை பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பெர்னார்ட் மோரஸ் அர்ச்சிக்கிறார். தேர் பவனியை தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசிர் நடக்கிறது. பக்தர்கள் அனைவரும் பங்கேற்குமாறு ஆலய ரெக்டரும், பங்கு தந்தையுமான உதயகுமார் கேட்டுக் கொண்டு உள்ளார்.