உக்கிர பிரத்யங்கிரா தேவி கோயில் சிவநாம வில்வ அர்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2016 12:01
பனைக்குளம்: உச்சிப்புள்ளி அரியமான் கடற்கரை ரோடு உக்கிர பிரத்யங்கிரா தேவி கோயில் வளாகத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு நேற்று மாதாந்திர சிவநாம வில்வ அர்ச்சனை பூஜை துவங்கப்பட்டது. தீர்த்தாண்டதானம் ஓதுவார் எஸ்.ஆர்.ஞானதாசன் பூஜைகளை செய்தார். தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகள் பாடப்பட்டன. உற்சவர் சிவலிங்கத்திற்கு சிவசகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் பழனிவேலு மற்றும் வார வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர். ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிவநாம அர்ச்சனை நடக்கும்.