பதிவு செய்த நாள்
04
ஜன
2016
12:01
ஊட்டி: ஊட்டி குழந்தை ஏசு திருத்தலத்தில், 31வது ஆண்டு திருவிழா, நேற்று நடந்தது. கடந்த, 30ம் தேதி, குரு அமிர்தராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் மாலை, அவரது தலைமையில் சிறப்பு மறையுரை, நவநாள், திருப்பலி நடத்தப்பட்டது. விழா நாளான நேற்று, மறைமாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடந்தது. ஊட்டி புனித மேரீஸ் தேவாலய பங்கு குரு வின்சென்ட், சகாயதாஸ் பங்கேற்றனர். திருப்பலியில், ஜாதி, மத பேதமின்றி மக்கள் பங்கேற்றனர். நேற்று மதியம், சோனி தலைமையில் மலையாள திருப்பலி நடந்தது. பின், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், குழந்தை ஏசு, அப்பர் பஜார், மெயின் பஜார் சாலைகளில் பவனி வந்தார். விழா ஏற்பாடுகளை தேவாலய செயலர் அமிர்தராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.