சூலுார்: சூலுார் ஆறுபடை முருக பக்தர்கள் குழு சார்பில், அன்னதான விழா நடந்தது. சூலுார் ஆறுபடை முருக பக்தர்கள் குழு சார்பில், ஆண்டுதோறும் அன்னதான விழா நடக்கும். சூலுார் சிவன் கோவிலில், 43வது அன்னதான விழா நடந்தது. கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அன்னதானத்தில் பங்கேற்றனர். நாளை இரவு, 8:00 மணிக்கு சூலுார் சீரணி கலையரங்கில், பக்தி நெறியும் தர்ம சிந்தனையும் இன்றைக்கு வளர்ந்திருக்கிறதா, தளர்ந்திருக்கிறதா என்ற தலைப்பில், சிந்தனை பட்டிமன்றம் நடக்கிறது.