கோபி: ஈரோடு மாவட்டம், கோபி மேவாணி அருகே தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில், ஆராட்டு பெருவிழா மற்றும் ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி கீழ்வாணி பவானி ஆற்றில், ஐயப்ப சுவாமியின் உருவ சிலைக்கு ஆராட்டு விழா நடந்தது. அதையடுத்து பல்வேறு பழவகைகள் மற்றும் மூலிகை பொருட்களால், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கடந்த, 3ம் தேதி இரவு ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரை புறப்பட்டு சென்றனர்.