மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசிய பாதுகாப்பு படை ஆய்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2016 10:01
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தேசிய பாதுகாப்பு படை 4 மணி நேரம் ஆய்வு செய்தது.இக்கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை தொடர்ந்து, மத்திய உளவுத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு படை அறிவுரைப்படி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று தேசிய பாதுகாப்பு படை மண்டல டி.எஸ்.பி., விஸ்வநாதன், இன்ஸ்பெக்டர் பிரகாசம் மற்றும் 2போலீசார் கோயிலுக்கு வந்தனர். மதியம் 12:30 மணி முதல் 2:30 மணி வரை ஆடி வீதிகள், கோயில் மேல்தளம், கோபுரங்களில் ஆய்வு செய்தனர். பின், போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ்விடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். இதற்கிடையே, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மீண்டும் மாலை 6:30 மணிக்கு வந்தனர். இரவு 8:00 மணி வரை கோயில் முழுவதும் ஆய்வு செய்தனர். இன்றும் ஆய்வு நடக்கிறது.