பழநி தைப்பூச விழாவுக்கு 30 லட்சம் பஞ்சாமிர்த டப்பாக்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2016 10:01
பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநிகோயில் அபிஷேக பஞ்சாமிர்த தட்டு்பாட்டை தவிர்க்க 30 லட்சம் டப்பாக்கள் தயார் நிலையில் உள்ளன.பாதயாத்திரைக்கு உலகப்புகழ்பெற்ற பழநி தைப்பூச விழா வரும் ஜன.,18ல் துவங்கி 27 வரை நடக்கிறது. இந்நிலையில் தற்போதே ஏராளமான பாதயாத்திரையாக பக்தர்கள் மற்றும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் அபிஷேக பஞ்சாமிர்தத்தை விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் சாதாரண நாட்களில் தினமும் 50 ஆயிரம் டப்பாக்களும், விடுமுறைநாட்களில் ஒரு லட்சம் டப்பாக்களும் விற்பனை ஆகின்றன.கடந்த 2013ல் டப்பாக்கள் பற்றாக்குறையால் அபிஷேக பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை தவிர்க்கும் விதமாக கோயில் நிர்வாகத்தினர் 19 லட்சம் டப்பாக்கள், 13 லட்சம் டின்களை கொள்முதல் செய்து தயார்நிலையில் வைத்துள்ளனர். பழநிகோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ அரைக்கிலோ டப்பா ரூ.30, டின் ரூ.35 விற்பனை செய்கிறோம். மலைக்கோயில், உபகோயில் மட்டும் இல்லாமல் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களிலும் பஞ்சாமிர்தம் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. கடந்த ஆண்டுகளை போல தைப்பூசவிழா நேரத்தில் பஞ்சாமிர்த தட்டுப்பாட்டை தவிர்க்க முன்கூட்டியே கூடுதலாக டப்பாக்கள், டின்களை கொள்முதல் செய்துள்ளோம்,”என்றார்.