அகத்தியர் சுத்திகரணம் செய்த தீர்த்தக்குளம் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட அவலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2016 12:01
கீழக்கரை: திருப்புல்லாணியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் சேதுக்கரை செல்லும் வழியில் அமைந்துள்ளது அகத்தியர் தீர்த்தக்குளம். நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தின் கரைப்பகுதி கருவேல மரங்களால் புதர்மண்டி உள்ளது. இதனால் தீர்த்தக்குளம் உள்ளதற் கான சுவடே தெரியவில்லை.
அண்மையில் பெய்த பலத்த மழை யால் குளம் நிரம்பியுள்ளது. இதன் அருகில் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், வெள்ளை பிள்ளையார், மாமுனிவர் அகத்தியர் கோயில்கள் உள்ளன. பட்டாச்சாரியார் ஒருவர் கூறுகை யில், ""முற்காலத்தில் தமிழ் மாமுனிவர் அகத்தியர் இப்பகுதிக்கு வந்தபோது, காலரா நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கருதி இக்குளத்தினை சுத்திகரணம் செய்து புனித நீராக்கி குணப்படுத்தினார் என்பது புராண வரலாறாகும். சேதுக் கரைக்கு வரும் யாத்ரிகர்கள் அகத்தியர் குளத்தில் நீராடிய பின்னரே சேதுக்கரை கடலில் புனித நீராடும் வழக்கம் இருந்தது. காலப்போக்கில் இக்குளம் தூர்வாரப்படாமலும், பாரமரிக்கப்படாமலும் உள்ளதால் பக்தர்களின் கவனத்திற்கு தெரி யாமல் உள்ளது. மேலும் இப்பகுதி களில் உள்ள ஏராளமான இறால் பண்ணைகளின் கழிவு நீர் குளத்தில் கலந்து பாழ்பட்டு வருகின்றன. குளத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும், என்றார்.