வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அக்ரஹாரம் ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமியின் ஆராதனை விழா நடந்தது. காலை சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை நடந்தது. மடாதிபதியின் உருவப்படம் நகர்வலம் அழைத்து வரப்பட்டு பூஜைகள் நடந்தன. வேதபாராயணம் பாடப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.சுதர்சன் ஆச்சாரியார் தலைமையில் ஊர்வலம் நடந்தது. ஓய்வு பெற்ற அதிகாரிகள் பி.எஸ்.என்.எல்., கோட்டப் பொறியாளர் ராஜாராம், வங்கி அதிகாரி வெங்கட்ராமன், சிருங்கேரி மட நிர்வாகி பாலகிருஷ்ணன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பிருந்தாவன நிறுவனர் கோபிநாதன் செய்திருந்தார்.