பதிவு செய்த நாள்
09
ஜன
2016
12:01
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ராகு,கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது. கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ராகுவும், மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவக்கிரகங்களுக்கு ராகு, கேது சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 11:30 மணிக்கு விக்னேஷ்வரர் பிரார்த்தனை, நவகிரக சாந்தி மகா அபிஷேகம், அதிதேவதை, பிரத்ததி தேவதை சகிதமாக உளுந்து, கொல்லு உள்ளிட்ட தானியங்களில் புஜைகள் செய்யப்பட்டு, மதியம் 12:35 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து 27 நட்சத்திர தீபங்கள் எற்றப்பட்டு, பரிகார சாந்தி பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.