Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை, சக்குடி ஆதி சொக்கநாதர் ... திரவுபதி அம்மன் கோவிலில் ராகு, கேது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூவரசன்குப்பம் சிவன் கோவிலில் ராகு பெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2016
12:01

விழுப்புரம்: பூவரசன்குப்பம்  சிவன் கோவிலில் ராகு பெயர்ச்சி விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் சிவலோகநாயகி சமேத நாகேஸ்வரசுவாமி கோவிலில், ராகு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. ராகு பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்மராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு கடந்த 6ம் தேதி இரவு 7:00 மணிக்கு அனுக்ஞையுடன் யாகபூஜைகள் துவங்கியது. 7ம் தேதி காலை 7:00 மணிக்கு மகா நவசண்டி ஹோமமும், பூர்ணாஹூதியும் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு சந்திரலேகா, சிம்மிகா சமேத ராகுபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 7:00 மணிக்கு லட்சார்ச்சனையும் துவங்கியது. காலை 8:30 மணிக்கு பரிகாரஹோமங்களும், மதியம் 12:00 மணிக்கு உற்சவர் ராகுவிற்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12:37 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது.  இதில், ராகுபகவான் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராகு பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் நாகராஜ குருக்கள், ஆய்வாளர் சரவணன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதேபோல், திருவெண்ணெய்நல்லுõர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ராகு, கேதுவிற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
அவிநாசி; ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar