Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரவுபதி அம்மன் கோவிலில் ராகு, கேது ... ராசிபுரத்தில் வாசவி அம்மனின் நிஜ பாத தரிசனம் ராசிபுரத்தில் வாசவி அம்மனின் நிஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேரமான் பெருமாள் நாயனாருக்கு சிலம்பொலி கேட்கும்: ஆன்மிக சொற்பொழிவில் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2016
12:01

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், பெரியபுராண தொடர் சொற்பொழிவு, மலையடிவாரம் ஆயிரவைசியர் திருமண மண்டபத்தில், நேற்று நான்காவது நாளாக நடந்தது. இதில், சென்னையை சேர்ந்த, ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.வி.பி.எஸ். மணியன் பேசியதாவது: இன்றைய கேரளா மாநிலத்தில் கொடுங்கல்லூர் என்று ஒரு ஊர் உள்ளது. இதை தலைநகராக கொண்டு சேரமான் பெருமாள் நாயனார் ஆட்சி புரிந்து வந்தார். சிவபெருமான் இவரது அன்புக்கு உளமுவந்து சிலம்பொலி கேட்குமாறு அருள் புரிவார். ஒருநாள் பூஜையின் முடிவில் சிலம்பொலி கேட்கவில்லை. இதனால், வருத்தமுற்றவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். உடனே, நடராஜர் சிலம்பொலி கேட்டது. இதற்கு காரணம், நடராஜ பெருமான் நம்பியாரூரது தமிழ் பதிகங்களை கேட்டு மெய் மறந்ததால் தான் என, தெரிந்து கொண்ட சேரமான் பெருமாள், சுந்தரரை தரிசிக்க விரும்பி திருவாரூர் சென்று நட்பு பூண்டார். சுந்தரர், நாயனார் நட்பானது சுந்தரர் கயிலை செல்லும் வரை நீடித்தது. சுந்தரர் திருவஞ்சைக்களத்து ஈசனை வழிபட்டுக்கொண்டு சேரமானுடன் வாழ்ந்து வந்தவர், பூலோக வாழ்க்கையை நிறைவு செய்ய முடிவு செய்தார். இதை உணர்ந்த சிவபெருமான், ஐராவதம் என்ற தேவலோகத்து யானையை அனுப்பி சுந்தரரை அழைத்து வர ஆவன செய்தார். தம்பிரான் தோழரும் சுந்தரரை போலவே, திருநொடித்தான் மலை செல்ல தன் பட்டத்துக் குதிரையின் செவியில் நமச்சிவாய மந்திரம் கூறி சுந்தரருக்கு முன்னதாக கயிலை சென்றடைந்தார். இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar