பதிவு செய்த நாள்
09
ஜன
2016
12:01
ராசிபுரம்: ராசிபுரத்தில், ஆந்திர மாநில வாசவி அம்மனின் நிஜ பாதத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆந்திரா மாநிலம், பெனுகொண்டாவில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி தங்க கோவில், வாசவி அம்மன் நிஜ பாதம் அமைக்கப்பட உள்ளது. அதற்கு முன், ராசிபுரம் கச்சேரி தெருவில் உள்ள, கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு, அந்த இரண்டு பாதங்கள் எடுத்துவரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதில், பெரிய பாதம், 1,500 கிலோ எடையிலும், சிறிய பாதம், 40 கிலோ எடையிலும் உள்ளது. அம்மனின் பாத சேவை ரதம், ராசிபுரம் ராஜவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சுற்றி வலம் வந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.