மரக்காணம்: வட அகரம் முத்துமாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது. மரக்காணம் ஒன்றியம், வடஅகரம் முத்துமாரியம்மன் கோவில் புணரமைக்கப்பட்டு முத்துமாரியம்மன், விநாயகர், முருகர், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு, கடந்த நவ., மாதத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று மண்டலாபிஷேக விழாவை ஒட்டி, காலையில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மாலை 3:00 மணியளவில், கோவிலில் மண்டலாபிக விழா நடந்தது.இதில், ஒன்றிய கவுன்சிலர் சேது மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.