Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்துமாரியம்மன் கோவிலில் ... செல்வ விநாயகர் கோயிலில் ராகு - கேது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பு கோயில்களில் ராகு, கேது பெயர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2016
12:01

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி கருமாரியம்மன் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது. காலையில் நவக்கிரக சன்னதியில் உள்ள ராகு, கேது பகவான்களுக்கு 18 வகை அபிஷேகம், புத்தாடை அணிவிப்பு நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ராகு பகவான் சிம்மராசிக்கும், கேது பகவான் கும்பராசிக்கும் பெயர்ச்சியாவதை குறிக்கும் வகையில் அந்த இரு ராசிக்காரர்களுக்கும் சிறப்பு பரிகார பூஜைகள் நடந்தது. பின்னர் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியை சேர்ந்தவர்களுக்கும் எந்தெந்த இடத்தில் சஞ்சரிக்கிறார்கள் என்பதை குறித்து அதற்கான நன்மை, தீமைகளை நிவர்த்தி செய்யவேண்டி சிறப்பு பிரார்த்தனையும், அர்ச்சனை வழிபாடுகளும் நடந்தது. இறுதியில் 108 ஸ்லோக வழிபாட்டுடன் பூஜைகள் நிறைவடைந்தது. பக்தசபா தலைவர் சித்ரவேல், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் திருப்பதி, ஜோதிடர் நடராஜன் ஏற்பாடு செய்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை செய்து வழிபட்டனர். * வத்திராயிருப்பு காசிவிஸ்நாதர் கோயில், மூவரைவென்றான் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் நடந்த விழாவில் ராகு, கேது பகவான்களுக்கு சிறப்பு அபிஷேகம் ,தீபாராதனைகள் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar