சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் பிரதோஷ விழா நடந்தது. சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ரவி குருக்கள், கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பிரதோஷ நாயகருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துõர், முதல்பாலமேடு, பாக்கம், கடுவனுõர், மூக்கனுõர், தியாகராஜபுரம் சிவன் கோவில்களில், பிரதோஷ விழா சிறப்பாக நடந்தது.